Yuvashree - Integrated M.Sc. Biotechnology (2019)
பெயர்க்காரணம் தமிழில் வேல் என்ற சொல் இந்து மதக் கடவுள் முருகன் ஆயுதமான ஈட்டி எனவும், ஊர் என்பது முருகக் கடவுள் ஆயுதத்தைப் பயன்படுத்திய இடத்தைக் குறிப்பதாகவும் நம்பப்படுகிறது. இந்து மதப் புராணத்தின்படி, தீய சக்திகளை அழிப்பதற்காக வேலுடன் தாமரைக்குளத்தில் தோன்றிய ஒரு பழங்குடியின வேட்டைக்காரனாக முருகக் கடவுள் கருதப்படுகின்றார். எனவே "வேலூர்" என்றால் முருகன் தோன்றிய ஊர் எனப் பொருள் கொள்ளப்படுகிறது. மேலும் வேல மரங்கலால் சூழப்பட்ட நிலம் என்பதால் இவ்வூர் வேலூர் என்று அழைக்கப்பட்டது என்று மற்றொரு விளக்கம் தருவாரும் உண்டு.
வரலாறு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள சோழர் காலக் கல்வெட்டில் உள்ள பதிவுகளின் அடிப்படையில் நோக்கும்போது வேலூரின் வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பிறகு துவங்குகிறது. அதற்கு முன்னர் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் காஞ்சிபுரம் தலைநகராகக் கொண்டிருந்த பல்லவர்களின் ஆட்சி முறை பற்றிக் குறிப்பிடுகின்றன. 850 முதல் 1280 வரையான ஆண்டுக் காலத்தில் வேலூர்ப்பகுதி சோழ மன்னர்களால் ஆளப்பட்டது. சோழ மன்னர்களுக்குப் பிறகு இராட்டிரகூடர்கள், பிற்காலச்சோழர்கள் மற்றும் விசயநகர மன்னர்களால் தொடர்ந்து ஆளப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டின் மூன்றாவது காலாண்டில் விசய நகர மன்னர்களின் பிரதிநிதியாக விளங்கிய குச்சி பொம்மு நாயக்கர் என்ற சிற்றரசர் கோட்டை கட்டினார்.
ஆற்காடு நவாப் 17 ஆம் நூற்றாண்டில், வேலூர் ஆற்காடு நவாப்பின் ஆட்சியின் கீழ் வந்தது. முகலாயப் பேரரசின் சரிவுக்குப் பின்னர், நவாப்பால் இந்நகரைக் கட்டுப்படுத்த முடியாமல் போக, 1753க்கு பிறகு குழப்பமும் கலவரமுமான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர், வெவ்வேறு இந்து, முஸ்லிம் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வேலூர் வந்தது. பீஜப்பூர் சுல்தான் 17ஆம்நூற்றாண்டின் மத்தியில் பீஜப்பூர் சுல்தான் இக்கோட்டையைக் கைப்பற்றினார். பின்னர் மராட்டியர்களாலும், தில்லி சுல்தானின் தளபதியும், கர்நாடகத்தின் நவாப்புமான தாவூதுகானாலும் கைப்பற்றப்பட்டது. 1760ஆம் ஆண்டு வேலூர்க் கோட்டை ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பெனியினரின் வசம் சென்றது. ஆங்கிலேயர் திப்பு சுல்தானைத் தோற்கடித்த பின்னால் அவருடைய மகன்களை வேலூர்க்கோட்டையில் சிறைவைத்தனர். 1806 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இக்கோட்டையில் இந்தியச் சிப்பாய்கள் கலகம் செய்தார்கள். இந்நிகழ்ச்சியை, வேலூர் சிப்பாய் எழுச்சி என்று இந்திய வரலாற்றில் குறிப்பிடுகின்றனர்.
வோலூர் கோட்டை வரலாறு
வேலூர் கோட்டை 16-ஆம் நூற்றாண்டில் பொம்மி நாயக்கரால் (விஜயநகர பேரரசு) கட்டப்பட்ட கோட்டையாகும்.
அகழி மற்றும் உறுதியான கல் கட்டுமானங்களுக்குப் பெயர் பெற்றது. ஒரேயொரு வாயில் கொண்ட அமைப்பில் கட்டப்பட்டுள்ள இக்கோட்டை 133 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 191அடி அகலமும் 29 அடி ஆழமும் கொண்ட அகழி இக்கோட்டையச் சுற்றிலும் அமைந்துள்ளது. இக்கோட்டைக்குள் ஜலகண்டேஸ்வரர் கோயில், தேவாலயம், பள்ளிவாசல், அரசு அருங்காட்சியகம் உள்ளது. நாயக்கர்களிடம் இருந்து பீஜப்பூர் சுல்தானுக்கும் பின்னர் மராட்டியருக்கும் தொடர்ந்து கர்நாடக நவாப்புகளுக்கும் இறுதியாகப் பிரிட்டிஷாருக்கும் இக்கோட்டை கைமாறியது. 1947 இல் இந்தியா விடுதலை பெறும்வரை இக்கோட்டை பிரிட்டிஷார்களிடமே இருந்தது. பிரிட்டிஷார் காலத்தில் இக்கோட்டையிலேயே திப்பு சுல்தான் குடும்பத்தினர் மற்றும் இலங்கையின் கண்டியரசின் கடைசி தமிழ் மன்னனான ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனும் சிறை வைக்கப்பட்டனர். பிரிட்டிஷாருக்கு எதிரான முதலாவது கிளர்ச்சி சிப்பாய்கலகம் இக்கோட்டையிலேயே 1806 ஆம் ஆண்டில் நடந்தது. கோட்டையில் திப்புமஹால், ஹைதர்மஹால், கண்டிமஹால், ஜலகண்டேஸ்வரர் கோவில், தேவாலயம், மசூதி கோட்டையின் உட்புறத்தில் அமைந்துள்ளது.
வேலூர் அரசு அருங்காட்சியகம் 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் முதல் நாளில் இருந்து வேலூர் கோட்டைக்குள் இயங்கி வருகிறது.
சிப்பாய் புரட்சி
ஆங்கிலேயர் தென்னிந்தியாவை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின் வட இந்தியா மீது ஆதிக்கம் செலுத்த தொடங்கினார்கள்.
அப்போது ஆங்கிலேய இராணுவத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள் பணியாற்றினர். இவர்கள் எத்தனை தியாகங்கள் செய்தாலும் அதனை பிரிட்டிஷ் அரசு அங்கீகரிக்க மறுத்துவிட்டது. இது அவர்கள் மனதில் அனலாய் தகித்துக் கொண்டு இருந்தது. அந்த நேரம் வீரர்களுக்கு பசு, பன்றி நெய் தடவப்பட்ட வெடி குண்டுகளை போர் களத்தில் பயன்படுத்த வேண்டும் என்றனர் ஆங்கிலேய அதிகாரிகள். இதற்கு இரு தரப்பு வீரர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை பயனபடுத்திக் கொண்ட திப்புவின் வாரிசுகள் ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சி செய்ய திட்டம் வகுத்தனர். அதன் படி நீண்ட திட்டம் வகுத்து மக்களிடம் ரகசிய பிரச்சாரம் செய்யப்பட்டு நம்பிக்கையான படை வீரர்கள் மூலம் தகவல் பறிமாறப்பட்டு தயார் செய்யப்பட்டது.
1806 ஜீலை 10ந் தேதி புரட்சிக்கான நாளாக ரகசியமாக குறிக்கப்பட்டது. அன்று திப்புசுல்தானின் மகன் ஒருவருக்கு திருமணம். விடியற்காலை புரட்சி தொடங்கியது. ஆங்கிலேய அதிகாரிகள், வீரர்கள் என நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். கோட்டையில் திப்புசுல்தானின் புலி கொடியேற்றட்டப்பட்டது.
அடுத்த ஆறு மணி நேரத்தில் ஆற்காடு, சித்தூர் பகுதியில் இருந்து படைகள் வரவழைக்கப்பட்டு ஆங்கிலேயர்கள் கோட்டையை மீட்டனர். திப்புவின் வாரிசுகளின் பாதுகாவலர்கள், புரட்சியின் தளபதிகள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அடுத்த சில நாட்களில் திப்புவின் வாரிசுகள் வட மாநிலங்களுக்கும், அவர்களது நம்பிக்கையான தளபதிகள் திருநெல்வேலிக்கும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அனுப்பி தங்களது பாதுகாப்பில் வைத்துக் கொண்டனர். இந்த புரட்சி தான் ஆங்கிலேயருக்கு எதிராக இந்திய விடுதலைக்காக நடத்தப்பட்ட முதல் புரட்சியாகும்.
சர்வ மதம்
கோட்டைக்குள் நுழைந்ததும்மே வடக்கு பக்கம் இந்துக்களுக்காக ஜலகண்டேஸ்வரர் கோயிலும், இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தெற்கு புறம் மசூதியும், ஆங்கிலேயர்கள் பிரார்த்தனை செய்ய தென்மேற்கு பகுதியில் சர்ச்சும் கட்டப்பட்டுள்ளது. கோட்டைக்குள் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் 1566 பொம்மு நாயக்கரால் கட்டப்பட்டது.
திப்புசுல்தான் வாரிசுகள், குடும்பத்தார், உறவினர்கள் கோட்டைக்குள் தொழுகை நடத்த மசூதி கட்டப்பட்டது. இரண்டாயிரம் பேர் அமர்ந்து ஒரே நேரத்தில் தொழுகை நடத்தலாம். அதே போல் தென்னிந்தியாவின் முதல் அரபுக் கல்லூரியான ஜாமி ஆ பாக்கியத்துல்ல என்ற கல்லூரி இதன் அருகே உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது கோட்டைக்குள் பணியாற்றிய ஆங்கிலேய அதிகாரிகள், அவரது குடும்பத்தார் பிரார்த்தனை செய்ய 1846ல் புனித ஜான் தேவாலயம் கட்டப்பட்டது.
Comments