by K. Mahalakshmi - B.Sc. Agriculture (2019)
அன்றோ மூடிய ஜன்னலின் சிறு துளையின் வழியே வீதியை நோக்கமிட்டாள் ;
இன்றோ அவ்விதியில் நகைப்புடன் உலா வருகிறாள் :
அன்றோ அய்யனை இழந்து , சிறாராய் இருப்பினும் விதவை வேடம் புன்னைந்தாள் ;
இன்றோ மங்கையின் மனம் விரும்ப மறுமணம் பூண்டுக்கொள்கிறாள் :
அன்றோ மகத்துவம் மறைத்து இருள் புகையினுள் துன்புற்றாள் ;
இன்றோ சமத்துவம் பெற்று வாகைசூடி இன்புறுகிறாள் :
அன்றோ ஆண்மை கயிற்றினால் சுழன்றாள் ;
இன்றோ அவ்வாண்மையிடம் தன் உரிமையை புகட்டுகிறாள் :
சொரூபம் பிரதிபலித்து ;சந்தர்ப்பம் வகுத்து ; சிநேகிதம் வளர்த்து ;விநோதம் புகுத்தி ;நிர்ணயம் கூறி ; உணர்த்தினாய் , உன் பெண்மையை எம்போன்ற தாயின் பிள்ளைகளுக்கு :
எங்ஙனம் காண்பேன் ,என் தாயை தவறாக; எங்ஙனம் தாழ்த்துவேன் , என் தங்கையை அதிகாரமாக ;எங்ஙனம் அடிமையாக்குவேன் , என் மனைவியை ஆதிக்கமாக ;
எங்ஙனம் தவிர்ப்பேன், என் தோழியை விரோதமாக: கண்டேன் பெண்ணை பெண்மையாக மட்டுமில்ல தாய்மையாக ,உயிர்மையாக பெண்மை இன்றி உலகம் எங்கு ;
பெண்மை அறியா உலகம் இங்கு :
இன்றைய சூழலில் ,
பெண்மை காக்கப்படுகிறது என்று
அரைக்கூவல் விடுத்து ,கவரத்தானேப்படுகிறது .
சமத்துவம் அளித்தீர் ; அதனையும்
சமயம் பார்த்து மிதித்தீர் :
மங்கையின் மனதில்
அச்சம் குடிக்கொண்டு தான் இருக்கிறது ,
அன்றோ ஜன்னலுக்கு பின்னால் ;
இன்றோ உலா வரும் வீதியின் முன்னால் :
ஏழு பருவங்களை இன்பமுற கடப்பினும் ,
எதிரில் வரும் மூடனால் கதிகலங்கி நிற்கிறாள் :
எழ முடியாமல் கிடக்கிறாள் எதிர்நோக்கியவன் முரடன் அல்ல மூடன் என்பதால் .
இன்றைய பெண்மையின் வேண்டுக்கோளோ இந்நிலை ஒழியவேண்டும் என்றில்லை ; சற்றாவது குறையாதா என்றே ....
பெண்ணை , பெண்மை என்றில்லாது உயிர்மை எனக்காணும் காலமே விரைந்து வருவாயாக.
Comments