by Jagan Prasath - M.Tech Software Engineering (2017)
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி... என்ற தனிப்பெரும் குணத்தை இன்றளவும் உலகெங்கும் மார் தட்டிப் பெருமிதம் கொள்கின்றனர் தமிழ் பேசும் ஒவ்வொரு உயிர்களும்.
உலகளவில் தன் இனத்திற்கும் , மொழிக்கும் , பண்பாட்டிற்கும் சிறு சிதைவு ஏற்படுமாயின் ஒன்று சேர்ந்து நீதி நிலைநாட்டும் இனக்குழுக்களில் தமிழினம் என்றும் முதன்மை தான்,
பேச்சுவாக்கில் இருந்து பல மொழிகள் மறந்தும் வழக்கொழிந்தே போகிய இச்சூழலிலும் எழுத்து வளமும், இலக்கிய இலக்கண செல்வங்களைத் தலைமுறை தலைமுறைகளாகப் பேணிக் காத்து வருகின்றனர் ,
பெருமையுடன் சொல்லிக்கொள்ளலாம் இருக்கும் ஏழு செம்மொழிகளில் அனைத்து விதமான தகுதிகளையும் முழு சதவிதத்தில் கொண்டு இன்றளவும் பேசப்படும் மொழி என்றும் அதை போற்றிக் காத்த இனம் என்றும்.
தமிழர் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு , ஆம் , எக்கால வரைபடமாக இருந்தாலும் எவர் ஆட்சியிலும் எவரிடமும் கைப்பற்றப் படாமல் தனித்த ஓர் நிலப்பரப்பாக இருக்கும் தமிழர்களின் தாய் நிலத்தில் தனியே பல கொள்கைகள் அவ்வபோது வாழ்ந்த தலைவர்கள் வகுத்து விட்டு பலரை ஈர்த்து வலிமையான இனத்தையும் , இனத்தின் மனநிலையையும் விதைத்து விட்டுச் சென்றுள்ளனர்.
உலகில் இன்று ஏறத்தாழ எல்லா நாடுகளிலும் தமிழர்கள் வாழ்கின்றனர், உலகளவில் எட்டரைக்கோடி தமிழர்கள் இருக்கிறார்கள் எழுநூறு கோடி உலக மக்கள் தொகையில் இது ஒரு ஒரு சதவீதமாயினும் உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் இது பதினெட்டாவது இடத்தில் உள்ளது.
அவ்வபோது பிற மொழியினர் தங்கள் மொழி தான் உலகில் பழமையெனச் சொல்லிக் கொண்டு தமிழ் மொழியை தாக்குவதுண்டு, அறியாமையில் பேசுபவரை என்றும் கண்டுகொள்வதில்லை தமிழர்கள்,
யாதும் ஊரே யாவரும் கேளிர் என எண்ணங் கொண்டு, பலவாரான துறைகளில் உலகிற்கே முன்னோடி என்பது இலக்கியச் சுவடுகளில் இருந்து புலனாகிறது,
உலகில் அழியின், கடைசி மனிதன் மடிந்தாலும் மீண்டும் பிறப்பெடுக்கும் புது மானிடன் பேசப்போகும் மொழி என்னவாக இருக்கும் என்று இங்கு யாருக்கும் தெரியப் போவதில்லை , ஆயினும் உலகம் இருக்கும் வரையிலும் தமிழ் இருக்கும்.
Comments