By செ அர்ச்சனா - BCA (2018-2021)
“நம்மில் ஒருவர் ஆகாத காரியத்தை எண்ணி முடங்கிக் கிடக்கும் போதும் தகுதிக்கு மீறிய ஆசை கொள்ளும் போதும் பெரியவர்கள் இப்பழமொழியைக் கூறுவதுண்டு”
ஒரு பெரிய காடு ஒன்று இருந்தது. அக்காட்டில் மரங்கள் அடர்ந்து இருந்தன. அடர்ந்த மரங்களில் கிளிக்கூட்டம் ஒன்று வசித்து வந்தது. காட்டு மரங்களில் கிடைக்கும் பழங்களையும் கொட்டைகளையும் தின்று அவை வாழ்க்கை நடத்தின.ஒரு சமயம் காட்டில் மழை பொய்த்து விட்டது. அதனால் காட்டிலிருந்த மரங்கள் பட்டுப்போக ஆரம்பித்தன.
காட்டிலிருந்த கிளிக்கூட்டத்திற்கு உணவு கிடைக்கவில்லை. எனவே கூட்டத்திலிருந்த கிளிகள் ஒவ்வொன்றும் அக்காட்டை விட்டுப் பல திசைகளை நோக்கிப் பறந்தன.ஒரு கிளி மட்டும் அக்காட்டில் நன்கு வளர்ந்த இலவ மரத்தில் காய்கள் தொங்கிக் கொண்டிருந்ததைக் கவனித்தது.
“ஆகா! எவ்வளவு காய்கள் இந்த மரத்தில் இருக்கின்றன. இவை பழுத்தால் நமக்குப் பல மாதங்களுக்கு உணவாகும்” என்று எண்ணியது கிளி.
அந்த இலவ மரத்திலேயே கிளி தங்கியது. இலவங்காய்கள் எப்போது பழுக்கும், எப்போது நமக்கு வயிறு நிறையும் என்ற ஏக்கத்துடன் கிளி காத்திருந்தது.
ஆனால் காலந்தான் கடந்தது. இலவ மரத்தின் காய்கள் பழுக்கவில்லை. மாறாக இலவ மரத்தின் காய்கள் காய்ந்து உடைந்து பஞ்சாகப் பறந்தது. இதைப் பார்த்த அக்கிளி ஏக்கத்துடன் உயிரை விட்டது.
இக்கதையே “இலவு காத்த கிளி” என்று பழமொழி உருவாகக் காரணமாக அமைந்து விட்டது!!!!!
நான் இங்கே இந்த வரிகளைப் பற்றிக் குறிப்பிட்டது, 'அவற்றில் பெரும் இலக்கிய நயம் இருக்கிறது ', என்ற கருத்தில் அல்ல.எளிய வார்த்தைகளிலும், எத்தனை அழகான உள்ளர்த்தங்கள் இருக்கும் என்பதைக் குறிப்பதற்காகவே!!!!!
Comments